அவிழ்க்க முடியாத முடிச்சு 7 🎻

அவிழ்க்க முடியாத முடிச்சு 7
********************************

உறக்கம்
என்பது
மரண ஒத்திகை.
கனவு
என்பது
கற்பனை வாழ்வு.

தினமும்,
சாவதற்கு ஒத்திகை.
கற்பனை வாழ்வு.

"நேற்றிரவு....",
என ஆரம்பித்தாள்,
என்னவள்.

அவளைச் மேற்கொண்டு
எதுவும் சொல்ல விடாமல்,
"நேத்து நைட்
நாம ஒன்னுமே பண்ணலியே?",
என
கிண்டலடித்தேன்.

"க்க்கும்...
புத்தி போவுது பாரு...",
என்று
சலித்துக் கொண்டவள்,
"லூசு... அதில்ல....
நேத்து நைட்டு
ஒரு கனவு வந்துச்சி...",
என்றாள்.

"அய்...
அப்படியா...
சொல்லு சொல்லு..."
ஆர்வமானேன்.

"அது ஒண்ணுமில்ல...
கனவில்
என் அத்தை பையன்
வந்தான்,
கையில் ஒரு ரோஜா
வைத்திருந்தான்...
என்னை காதலிப்பதாக
சொன்னான்....
அவ்வளவு தான்.
டக்குன்னு முழிச்சிட்டேன்....",
என்றாள்
பரவசமாக.

எனக்கு
எரிச்சலாக
வந்தது.

எப்போதும்
ஒரு முடிச்சை அவிழ்ப்பது
சுவாரஸ்யம் தான்.
"நீ
பொய் சொல்ற...",
என்று சமாளித்தேன்,
அல்லது
"கனவு" என்று சொல்லி
அவள் போட்ட முடிச்சை
அவிழ்க்க முயன்றேன்.

"இல்லை..
நிஜமாகதான் சொல்றேன்.",
என்னை வெறுப்பேற்றினாள்.

இது,
நான் என் ஆட்டத்தை
ஆரம்பிக்க வேண்டிய
நேரம்.

"எனக்கும்
நேத்து நைட்
ஒரு கனவு வந்துச்சி
தெரியுமா...?",
என்றேன்.

"டர்ட்டியா
ஏதாவது சொல்லுவ.
உன்னை பத்தி
எனக்குத் தெரியும்...",
என்றாள்
நக்கலாக.

"ச்சீ...
அதெல்லாம்
ஒன்னுமில்ல..
நேத்து நைட்
என் கனவில்
ஒரு பொண்ணு வந்தா..."
என
ஆரம்பித்தேன்.

"அப்புறம்...",
என்றாள்
லேசான கோபத்தோடு.

"காதல் சொன்னாள்..
நான் முடியாதென்றேன்.
கட்டிப் பிடித்தாள்.‌.
முத்தமிட்டாள்...
அப்புறம் நானும்
அவகிட்ட விழுந்துட்டேன்.
அப்புறம்..."

"போதும்
உங்க ரொமான்ஸ்...
நிறுத்து.",
என்றாள்.

"இன்னும்
கனவு முடியல....
முழுசா கேளு.",
என்றேன்.

"ஒரு மயிரும் வேணாம்...",
என்றவள்,
கையிலிருந்த
கைப்பையை வேகமாக
வீசினாள் என்மீது....

ஆனால் மக்களே...
அவிழ்க்க முடியாத முடிச்சை
அவிழ்ப்பது
சுவாரஸ்யம்
எனில்,
அப்படி ஒரு முடிச்சை போடுவது
அதை விட
சுவாரஸ்யம்....

அவள் வீசிய கைப்பை
என் மூக்கை
பதம் பார்த்தது.

மூக்கைத் தடவிக்கொண்டே,
"ஏய் லூசு...
கனவில் வந்த
பெண்ணே நீதானடி....",
என்றேன்.

சாரி...
சாரி...
தெரியாம அடிச்சிட்டேன்.
சாரிடா பக்கி.
சாரிடா கொரங்கு.."
என்று
என் மார்பில் சாய்ந்து
என் மூக்கை தடவி கொடுத்தாள்,
கொஞ்ச நேரத்திற்கு முன்
கைப்பையை வீசியவள்.

நிமிர்ந்து,
ரொம்ப வலிக்குதாடா...?
என்று அவள்
முத்தமிட்டது,
என் மூக்கில் மட்டுமல்ல....!

✍️கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (11-Nov-21, 2:08 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 145

புதிய படைப்புகள்

மேலே