அபிநயம்
அயிரமீனு கண்ணழகி
முல்லைத்தீவு பெண்ணழகி
மண்ணில் பிறந்த மண்அழகி
பொன்னே வியக்கும் பொன்னழகி
காதலத்தான் சொல்ல வந்தேன்
பக்கத்துல நிக்கறியே//
கண்ணால பாத்ததுக்கே
வெட்கத்தில சொக்குறியே
சொல்லவந்த என்ன நீயும்
துக்கத்தில வைக்கிறியே
தினந்தோறும் கனவில் வந்து தூக்கத்தில தைக்குறியே
கழுத்திலே நகபோட்ட
கண்டாங்கி சேலைக்காரி
கண்ணாலே கல்லை எல்லாம்
வேகவைக்கும் சூலை காரி
உன்னழகு என்னையும்
கிறங்கத்தான் வைக்குதடி//
ஒரு மணி வெயிலிலும் உறங்கத்தான் வைக்குதடி
உம்முகமும் முழுநெலவாய்
ஜொலிக்குதடி மண்ணில்
மின்னலாட்டம் உன் பின்னல் ஒளிக்குதடி கண்ணில்
எனக்காகப் பொறந்தவளே
நல்லசேதி சொல்லேண்டி//
இல்லைனா கண்ணாலே
என் உயிரை கொல்லேண்டி
அயிரமீனுக் கண்ணுக்காரி
ஆளையே மயக்குறியே//
உன் அழகால் அனைவருக்கும் நன்மை தான் பயக்குறியே
மாமன்மனசப் புரிஞ்சிகிட்டு
வயசுந்தான் ஆகுதடி
நீ பதில் ஒன்னும் சொல்லாம அண்ணான்னு சொல்லும்போது மனசு பூரா நோகுதடி
வஞ்சியே புரிஞ்சுக்கடி//
எத்தன நாளானாலும்
பொஞ்சாதி நீதாண்டி//
மாமன் மனசப் புரிஞ்சிக்கடி
மஞ்சக்கயித்த ஏத்துக்கடி//
பொன்னகையே வேணாம்டீ புன்னகையே
போதுமடி//