நாம் நினைப்பதெல்லாம் எங்கே நடக்குது
***************************************
உலகின்
90 சதவீத பெண்கள்,
தன் காதலன்
நன்றாக இருக்க வேண்டும்
என்று
நினைக்கிறார்கள்..
மீதம்
10 சதவீதப் பெண்கள்,
தன் காதலனையே
திருமணம் செய்து கொள்கிறார்கள்...
முதல் பாராவை
எழுதியவுடன்,
'க்க்கூம்ம்ம்...'
என்ற சத்தம் கேட்டது..
"உலகில்,
எத்தனையோ காதலர்கள்
சண்டைபோட்டு
பிரிந்து போகிறார்கள்...
நமக்கு மட்டும்,
ஏண்டா அப்படியெல்லாம்
நடக்கவே மாட்டேங்குது...?"
என்று கேட்டாள்
என்னவள்...
அதே நேரம்,
ஏதோ ஒரு டிவியில்,
அடுத்த பாரா
கவிதையை வாசித்தார்கள்,
'என்னவளுக்கு
பூ வாங்கி வந்தேன்.
நீயே வச்சிவிடு... என்று
தலையை காட்டினாள்.
இது முன்னமே தெரிந்திருந்தால்,
நான் அவளுக்கு
சேலை வாங்கி வந்திருப்பேன்...'
அவளுக்கு
வாங்கி வைத்திருந்த
லிப்ஸ்டிக்கை கையில்
எடுத்துக் கொண்டு,
நான்
என்னவளுக்கு
பதில் சொன்னேன்,
".இக்கவிதையின் தலைப்பு..."
✍️ கவிதைக்காரன்.