தம்மை வருத்தியு மாண்புடையார் செய்க அறக்கருமம் – அறநெறிச்சாரம் 23
நேரிசை வெண்பா
திருத்தப் படுவ தறக்கருமந் தம்மை
வருத்தியு மாண்புடையார் செய்க - பெருக்க
வரவும் பெருங்கூற்றம் வன்கண் ஞமன்கீழ்த்
தரவறுத்து மீளாமை கண்டு 23
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
நன்றாகச் செய்யத் தகுவது அறச்செயல்களேயாகும், வலிமிக்க எமன் உயிர்களைக் கவர்ந்து செல்லப் பலமுறை வருதலையும் கொடிய அவ் யமனது கட்டளையை மீறி அவனால் கவரப்பட்ட உயிர்கள் திரும்பாமையையும் காணலால், பெரியோர்கள் தமதுடலை வருத்தியேனும் அவ்வறத்தினைச் செய்வார்களாக எனப்பட்டது
குறிப்பு: வன்கண்மை - கொடுமை,