மழலையும் மகிழ்வும்

மழலையும் மகிழ்வும்
👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧
காதல் திருமணம் கலப்பு திருமணம்
கைவிடப்படுவர் பெற்றோர் எதிர்ப்பால்

ஆண்டு ஒன்று அப்படி ஓட
அன்பு மழலை பிறந்ததும் பாரீர்--தன்

குழந்தை பெற்ற குழந்தை காண
கொண்ட கோபம் மறைந்தே போகும்

குடும்ப சண்டை அப்பப்ப நிகழும்
குழந்தை வரவால் மின்னலாய் மறையும்

சண்டை முற்றி சச்சரவு பெருகி
தற்கொலை எண்ணம் தலைதூக்கும்போது

மடியில் படுத்து குழந்தை புரள
மறைந்தே போகும் எதிர்மறை எண்ணம்

மழலை வைக்கும் கோரிக்கை எல்லாம்
அழுகை என்ற விண்ணப்பத்தில் தானே

தீர்வுகள் வழங்கும் தெய்வம் யாராம்
கரிசனம் காட்டும் அன்னை தானே

துன்பம் துயரம் துக்கம் கோபம்
தீர்க்கும் மருந்தே உந்தன் சிரிப்பு

மணலால் கட்டிய மழலை வீட்டில்
கற்பனை உணவை கையில் தந்து

உண்டு உறங்கும் உன்னதம் பார்த்து
அன்னை அடையும் மகிழ்வே வாழ்வு

மழலை உதட்டில் இயந்திரச் சத்தம்
எரிபொருள் இன்றியே பொம்மையின் இயக்கம்

அறியாக் குழந்தை அன்றாட வாழ்வை
விளையாட்டாய் வாழ விரும்பும் உலகில்

எல்லா வளமும் இருந்தும் சிலரேன்
கல்லா மடையராய் காலனை அழைக்கனும் ?
🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡

எழுதியவர் : க.செல்வராசு (18-Nov-21, 5:57 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 110

மேலே