முத்த சுகம்

எதிர்பாராமல் திகைக்கவைத்த
உன் மயக்கிய முதல் முத்தம்,
பசுமரத்தாணிபோல் உறைந்தநிலையில்.

தேகமெங்கும் சுவைமிகுந்த சுகம்.
உன்னைப் பிரிந்த உன் பார்வைக்
கணைகள் என் மனதில் தைத்து,

காதல் விஷத்தினை எனக்குள்
ஊற்றிச் குழப்பிவிட்டது.

உன் உடலில் என் ரத்தமா இல்லை
என் உயிரில் கலந்து உன் உயிரா,

புரிவதற்குள் வீழ்ந்துவிட்டேன்.
விதைத்த காதலே வழியுரைக்கட்டும்.




எழுதியவர் : thee (30-Sep-11, 2:09 pm)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 370

மேலே