தாமரைக்கிழங்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கண்ணுக் கொளிகொடுக்குங் காசபித் தம்போக்கும்
எண்ணுங் குளிர்ச்சிதரும் ஏந்திழையே - புண்ணுகளில்
தூமரைப்,புண் ணும்போக்குந் தொந்திக் கடுப்பகற்றுந்
தாமரைக் கந்தமது தான்

- பதார்த்த குண சிந்தாமணி

இக்கிழங்கு கண்ணிற்கு ஒளியும், குளிர்ச்சியும் தரும்; பித்தகாசம், தவளைச் சொறி, வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Nov-21, 8:40 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே