சிவந்த அல்லிக்கிழங்கு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
செம்பைக்க ளிம்பகற்றிச் சிந்தூரம் ஆக்கிவிடும்
வெம்புபித்த மேகம் விலக்குங்காண் - அம்புவியில்
அல்லிற் கறுத்தகுழ லாரணங்கே நற்சிவப்பாம்
அல்லிக்கி ழங்கென் பது
- பதார்த்த குண சிந்தாமணி
பித்த மேகத்தை விலக்கும்; இக்கிழங்கு செம்பின்களிப்பை நீக்கும்;. செம்பைச் செந்தூரமாக்கப் பயன்படும்