வாயிற் காப்போன் குழந்தைகள் பார்வையில்

"" இது காறும் எம் பள்ளி வாயிலை
காத்து வந்தவரே,
நன்றி எனும் மாலையை உமக்கு
சூட விரும்புகிறோம் இப்பள்ளி மாணவரே,

நீங்கள் வாயிற்காப்போன் அல்ல, குழந்தைகளை காப்பவன். ஆம்!

கால் கடுக்க நின்று,
பொறுமைதனை கொண்டு,
பெருமை பல கண்டு,
நேற்று வரை நீர் செய்து வந்த தொண்டு,
இன்று வயதாகி விட்டதால்
சாதாரணம் அன்று.

பிஞ்சு நடை போட்டு,
கொஞ்சும் மொழி கேட்டு,
அஞ்சி அஞ்சி வந்தோரெல்லாம்,

மிடுக்கு நடை போட்டு,
துடுக்கு மொழி பேசி,
நெஞ்சை நிமிர்த்தி நடந்து சென்றாரே!

அவர்களுக்காக உழைத்து
களைத்தீர!
அவர்கள் உயர்வை கண்டு களித்தீர்!

இன்னும் என்ன சொல்ல ?

பற்று மிகுந்து வரப் பார்க்கிறேம்,
உம்மால் பெற்று வந்த உதவிகள் சொல்லில் அடங்காது.

நண்பனாய், மந்திரியாய்,
நல்லாசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்,
பார்வையிலே சேவகனாய்,

நாளெல்லாம் பள்ளியை காத்தீர்,
உம் இல்லம் என இதையும் பார்த்தீர்,
உண்மை உழைப்பதை வார்த்தீர்,
உமக்கு மட்டுமல்ல,
பள்ளிக்கும் நற்பெயர்
சேர்த்தீர்,

நாளை முதல் உமக்கு ஓய்வு !
அதில் தான் செய்ய வேண்டும் ஆய்வு,
உடலுக்குத்தான் தேவை
கொஞ்சம் ஓய்வு,
ஆனால் உம் உழைப்பிற்க்கு
என்றுமே ஆகாது தேய்வு.

இன்று விடை பெறப்போகும் நீவீர்,
இடையுரா அமைதி கண்டு,
தடையில்லா இன்பம் கொண்டு,
மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

கண்ணீரை மாலையாக்கி
சூட்டினால் காய்ந்து விடும் என்று,
நிகழ்வுகளை மாலையாக்கி, நினைவுகளை அதன் வாசமாக்கி, சூட்டுகிறோம், ஏற்றுக் கொள்க!

நீவீர் எல்லா நலமும், வளமும் பெற்று, அமைதியாக வாழ, இறைவனை
வேண்டி விடை தருகிறோம் ."

"சென்று வருக. நன்றி, வணக்கம்.".

எழுதியவர் : (22-Nov-21, 12:24 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 122

மேலே