உயிரை பணயம் வைத்து
உயிரை பணயம் வைத்து
கரையை தொட்டு
ஓடும் தண்ணீர்
இரு கரையையும்
இணைத்து
தரையோடு ஒட்டிய
பாலம்
தண்ணீரில் மிதக்கிறது
கடந்து செல்ல
நினைக்கையிலே
மனம் எல்லாம்
நடுங்குகிறது
இழுவை அதிகம்
இழுத்து சென்று
விட்டால்..!
கண் எதிரே
பள்ளிக்குழந்தைகள்
புத்தகப்பையுடன்
கடந்து கொண்டுதான்
இருக்கின்றனர்