நண்பன் இவன்
நண்பன் இவன்
என்னை
பிரதிபலிக்கும் நண்பன்
இவன்
நான் கண்னீர்
சிந்தும் போதும்
சிரிக்கும் போதும்
அவனும் அதையே
செய்கிறான்
என் முகம்
காட்டும் விகாரம்
இவனும் காட்டி
பழிக்கின்றான்
என் எல்லா
செய்கைகளை ஏற்று
செய்தாலும்
எனக்கு என்றும்
துரோகம் நினைக்காத
இவனே
என் தோழன்
ஆனால்..!
இவன் கண்ணாடி
முன் நின்றால்
மட்டும்
எதிரில்
தோன்றுகிறான்.