தலைவர் பிரபாகரன்

வாழைப்பழ
அரசியல்வாதிகளுக்கு
மத்தியில் இவர்
தமிழினம்
வாழப் பழம் கொடுத்தவர்

வலியால்
கிலி பிடித்த
தமிழினத்தை
புலி பிடிக்க வைத்தவர்

நடந்து வந்த தமிழனுக்கு தேர் கொடுத்தவர்
தமிழ் இனம் வாழ
சிங்களன் மீது போர் தொடுத்தவர்

தொகுதி பார்த்து
உதவி செய்வோர்
மத்தியில்
இவர் தமிழன் என்ற தகுதி
பார்த்து உதவி செய்தவர்

இவர் என்
தலைவன்
நானோ
இவரிடம்
விரல் இழக்காது
குரல் கொடுக்கத்
துடிக்கும்
ஏகலைவன்

வேலுப்பிள்ளை
தமிழ் இனம் காக்க
ஈன்ற பிள்ளை இவர்
புலிப்படை இருந்தாலும்
அன்பில் முள்ளை இவர்

இவர்
மனிதனாய்
பிறக்காது
தமிழனாய்
பிறந்தவர்
தமிழனுக்காக
தன் இன்னுயிர்
துறந்தவர்


தமிழினத்திற்காக இவர் குண்டு மழையில் நனைந்து கொண்டிருந்த நேரம்
நாமெல்லாம் மழையில் நனையாது ஒதுங்கி இருந்தோம்
இந்தியாவில்
இவருக்காக குரல் கொடுக்காது பதுங்கி இருந்தோம்

அந்நேரம்
அதிகாரத்தில் இருந்த
ஒரு தலைவர் மட்டும்
உண்ணா விரதம் இருந்தார்
பசித்தது
ஒரு மணி நேரத்திலேயே
விரதம் துறந்தார்

இவருக்காக
எல்லோரும் அணிந்து போராடினர் கருப்பு ஆடை
நாங்கள் எவ்வாறு அறிவோம் அதில் உள்ள கருப்பு ஆடை

தலைவா
விண்ணிலிருந்து பறந்து வா
மண்ணில் மீண்டும்
பிறந்து வா
துரோகத்தை மறந்து வா
சொர்க வாசல் திறந்து வா

உனக்காக தமிழினம்
காத்திருக்கிறது
வழிமேல் விழி
வைத்து பூத்திருக்கிறது
நீயின்றி தோற்றிருக்கிறது

எழுதியவர் : புதுவை குமார் (27-Nov-21, 6:10 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 82

மேலே