அன்னை அருள்
"உந்தன் அருளையே
வேண்டி நின்றேன்,
தந்திடு அதை நீ தாயே! (3)
1. அன்னையே உன்னையன்றியே
வேறு தெய்வம் எனக்குண்டோ? (2)
என்னையன்றி வேறு சேயும்
என்னை உதற உனக்குண்டோ?
(உ (2)
2. உதிக்கும் சூரியன் எனக்கு மட்டும்
சொந்தம் என்றால் நியாயமோ? (1)
துடிக்கும் நெஞ்சில் உதிக்கும் பாசம்
அதை மறுக்க நினைத்தால்
பாவமோ? (உ. (2)
3. மேகக்கூட்டம் சொறியும் நீர் தான்
உள்ளங்கையில் அடங்குமோ? (2)
தாகம் நெஞ்சை வாட்டும் நேரம்.
கொஞ்சம் குடித்தால் முடங்குமோ?
(உ (2)
-------