கவிஞர் சுபாஷினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கவி

மீன் ஆட்சி செய்யாத கரூரில்
தமிழை ஆட்சி செய்ய
மீனாட்சிக்கு பிறந்தவள் நீ

பெரிய சாமியின் கூட்டிலிருந்து
சிறகு முளைத்து இன்பமாய்ப்
பறந்தவள் நீ

தமிழை வளர்ப்பதில் சிறந்தவள் நீ தமிழுக்காக அனைத்தையும் துறந்தவள் நீ

அனைவரும் யானையில்
தாலாட்டு பெற நீ மட்டும் கலைவாணியின் வீணையில் அல்லவா தாலாட்டு பெற்றாய்

உனக்கு இன்று பிறந்தநாள் உலகிற்கு அது சிறந்த நாள்

நீ மலர்ந்தது ஐப்பசி
உன்னால் மறைந்தது
பிறரின் தமிழ் பசி

அனைவருக்கும் கவிதை கொடுத்த தமிழ்தாய் உனக்கு மட்டும்தான் அதன் விதையை கொடுத்தாள்

நீ விண்ணில் இருந்து கலைவாணியின்
கைநழுவிய வீணை
ஒரு நாள் உன் புகழ் எட்டும் வானை

அனைவரும் புத்தகத்தை வைத்து பாடம் நடத்திக் கொண்டிருக்க நீ மட்டும் புத்தான அகத்தொடும் பாடம் நடத்திக் கொண்டிருந்தாய்

நீ புலியூரில் வளர்ந்த கிளி
உன்னால் முடிந்தவரை நீக்கினாய் பிறரின் வலி

உன் கை இரண்டும் எதுகை
உன் மெய் என்றும் சொல்வது உண்மை

நீ தலையில் சூடும் பூ அன்பு
உன்னைத் தாக்க வந்தாலும் உன் கழுத்தில் மாலை ஆகிறது அம்பு
அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது உன் மேன்மைப் பண்பு

உன் சிரிப்பு அது சிறப்பு
உன் பிறப்பு கண்டு
பொறாமை கொள்கிறது
பிற பூ

நீ திறமைக்கு எடுத்துக்காட்டு
மேலும் உன் அறிவினை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டு

நீ பச்சை புடவை அணிந்தால்
நீதான் மதுரை மீனாட்சி
உன்னை தமிழுக்கு தாரை வார்க்க துணிந்தால் உன் அன்னை மீனாட்சி


நீ பல்லாண்டும்
தமிழ்ச் சொல் ஆண்டும்
வாழ அன்போடு வாழ்த்துகிறோம்

எழுதியவர் : புதுவை குமார் (28-Nov-21, 9:23 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 247

மேலே