நீ இல்லாத உலகில்

அம்மா
பனித்துளிப்போல்
உன் பாசம்
சூரியக்கதிர் போல்
உன் கண்டிப்பு ஆதலால்
வளர்ந்து மலர்ந்து
மனம் வீசுகிறோம் பூக்களாய்
இன்று நாங்கள்

அம்மா
உலக வாழ்வில் நானறிந்த
ஒரே புனிதமான வார்த்தை
தாய்ப்பாசம்
மற்ற பிள்ளைகளையும்
தான் பெற்ற பிள்ளைகளைப்போல்
நீ வளர்த்ததால்
அந்த தாய்ப்பாசமே
உன்னால் மேலும் புனிதமடைந்தது

அம்மா
நீ என்றும் நிரந்தரமானவள்
உன் அன்பு நிரந்தரம்
உன் அரவணைப்பு நிரந்தரம்
உன் நேசம் நிரந்தரம்
உன் நினைவுகள்
எங்கள் உள்ளத்தில்
என்றென்றும் நிரந்தரம்

அம்மா
என் சிந்தனைப் பூக்கவில்லை
என் செவிகளுக்கும் ஏதும் கேட்கவில்லை
மை சிந்தும் என் பேனா
இன்று கண்ணீர் சிந்துகிறது
வெந்து வெதும்பி நிற்கிறேன் நீயில்லாமல் என் தாயில்லாமல்

அம்மா
உலகத்தில்
தங்கங்களின் வகை ஐந்து
ஆறாவது ஒன்றிருந்தால் அது நீயே
மணிகளின் வகை ஒன்பது
பத்தாவது ஒன்றிருந்தால் அது நீயே
அதிசயங்களின் வகை ஏழு
எட்டாவது ஒன்றிருந்தால் அது நீயே
பூக்களின் வகை தொன்னூற்றோன்பது நூறாவதாக
ஒன்றிருந்தால் அது நீயே

அம்மா
எனக்கு யாரிருந்தால் என்ன பயன்
நல்ல பேரிருந்தால் என்ன பயன்
சொத்திருந்தால் என்ன பயன்
நல்ல சுகமிருந்தால் என்ன பயன்
நீ இல்லாத இவ்வுலகத்திலே...

உலகுக்கு பொறுமையை
சொல்லித் தந்த கிறிஸ்து ஏயேசுவின்
வழி வளர்ந்த தாயே உம் புகழ் வாழ்க...!


*தாயை பிரிந்து வாடும்
குடும்பத்தில் ஒருவனாக
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்*
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (29-Nov-21, 10:59 am)
Tanglish : nee illatha ulagil
பார்வை : 2183

மேலே