காற்றாய் இருப்போம்

கட்டளைக்கலித்துறை

காற்றது எங்கும் தவழ்ந்தே கலந்து பழகிவாறே
ஆற்றினுள் நீரில் மிதந்து குளிர்ந்து குளிரெனவே
சேற்றின் பயிரையும் முத்ததால் சில்லிட வைத்தவாறே
மாற்றம் எதுவும் அடையா நிலையிலே காற்றெனவே ----- (1)

ஞாலம் முழுதும் விரைந்து சுழன்று விசையெனவே
பாலமாய் நின்று புனலை அனலையும் சேர்த்தவாறே
வேலை எதுவுமே செய்யா நிலையில் உணர்வெனவே
மேலை நிலையில் மிடுக்காய் எதனையும் காத்தவாறே ----- (2)

சுழன்றிடும் காற்றாய் மனிதரும் மாறிடின் பண்பாகுமே
பிழையாய் பலவகை கேடினை வம்பாய் முனைந்தவாறே
பழிக்குப் பயப்படா தன்மையில் உள்ள மிருதனையே
எழிலாய் நினைக்கும் எவருமே பிண்ட அறிவுளரே. ----- (3)
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (29-Nov-21, 7:22 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 134

மேலே