முரண்பாடு தானே
ஓட்டுக்குக் காசு வாங்கி
ஓட்டு போட்ட
ஒவ்வொரு குடிமகனும்
ரோம் நகரில் வாழ்ந்து
கொண்டிருக்கும்போது
ரோமானியர்களாய் தான்
வாழவேண்டுமென்று
விளக்கம் கூறிவிட்டு,
அரசியலில் இருப்போரை
ஊழல்வாதிகளென
ஊரெல்லாம் சென்று
பொதுக் கூட்டம் போட்டு
மரியாதை இல்லாம
முறையிடுவது
முரண்பாடு தானே !