தவறுகள் செய்யாமல்

வெறுப்பதன் மூலம்
எவரையும் வெல்ல முடியாது
ஆனால் அதே மனிதனிடம்
அன்பு காட்டி அரவணைத்தால்
அவனை வெல்ல முடியும்

பணம், மனிதனுக்கு புகழையும்
பெருமையும் தந்து உதவினாலும்
பகட்டு காட்டி வெளியேறினால்
பாவம் அவன் புத்தி கெடும்
பிச்சையெடுத்து வாழ நேரும்

நேர்மையுடன் உழைத்து
தங்கத்தை போன்ற உண்மையை
பத்திரமாக சேமியுங்கள்
பகவான் இருக்கிறான்—அவன்
பார்த்துக் கொள்வான் உங்களை

சுய நலக்காரர்களை
சரிவர புரிந்து கொள்ளாதவரை
அவர்களை நம்பாதீர்கள்
அவர்களால் தவறுகள்
செய்யாமல் இருக்க முடியாது

எழுதியவர் : கோ. கணபதி. (2-Dec-21, 9:19 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 41

மேலே