பயணம்
ரயில் தண்டவாளங்களை
பார்க்கும் போதுதெல்லாம்
பிரிந்து நிற்கும்
இந்த தண்டவாளங்கள்
இணையதா ...என்று
ஏக்கம் கொள்வேன் ....!!
ரயில் தண்டவாளங்கள்
இணைந்தால்
ரயில் பயணம் விபத்தில்தான்
முடியும் என்பதை பிறகு
புரிந்து கொண்டேன் ....!!
அதுபோல் தான்
வாழ்க்கை பயணத்தில்
சில உறவுகளுடன்
ரயில் தண்டவாளத்தை போல்
நெருக்கம் கொள்ளாமல்....!!
விலகி நின்றே
வாழ்க்கை பயணம் செய்தால்
அனாவசியமான
மோதல்களை தவிர்த்து
விபத்தில்லாமல்
பாதுகாப்பாக
வாழ்க்கை பயணத்தை
தொடர முடியும் என்ற
வாழ்க்கை தத்துவத்தை
ரயில் தண்டவாளங்கள்
அருமையாக கற்பிக்கின்றது
என்பதை மிக தெளிவாக
அறிந்து கொண்டேன் ....!!!
--கோவை சுபா