வாழ்வே கணக்கு
எல்லாம் உலகில் ஒரு கணக்கே அண்டங்கள்
உருவானதும் உருவாவதும் சுழுன்றுபின் மறைவதும்
உயிரினங்கள் பிறப்பும் மறைவும் இன்னும்
மாமலையும் கடலும் மண்ணும் உருவாவதும்
பின்னே இருந்து நின்று அழிவதுவும்
அவரவர் வாழ்வில் உயர்வும் தாழ்வும்
உலகின் இன்பம் துன்பம் இயற்கையின்
அசைவும் இசைவும் சீற்றமும் என்று
தேவனின் சிருஷ்டியில் எல்லாம் காலத்தின்
ஆட்டத்தின் அழிக்கமுடியா கணக்கு