மன நோயாளி

ஆத்திரத்தால் மதி இழந்து
வாளால் தலையை சீவி கொலைசெய்கிறான்
கைகளில் படிந்த ரத்தக் கறையை
புண்ணிய நதியில் கரைத்து விட்டு
யாருக்கும் தெரியாமல் போகிறான்
அவனுக்கு தெரியாது அவன் மனதிற்கு
இவை எல்லாம் தெரியும் என்பது
மனதில் படிந்த கறையை இவன்
எங்கு கொண்டு கரைப்பான்.....
இப்போது தெருவில் அலைகிறான்
மன நோயாளியை தன்னையே
தெரிந்து கொள்ளாது....

ஷேஸ்பியரின் " மெக்பெத்"
ஞாபகத்தில் வந்தது இவனைப்
பார்த்ததும்.......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-Dec-21, 10:33 am)
Tanglish : mana noyaaLi
பார்வை : 96

மேலே