மாலையின் காதல் வேதமோ

மின்னல் விழியசைய
புன்னகைப் பூஉதிர
பின்னலில் மலர்சிரிக்க
கன்னத்தில் ஆப்பிளோ ?

சின்ன இடையில் சித்திரம்
கன்னக் கதுப்பினில் சின்னக்குழிவு
தென்றல் போல்நீ வந்தாயடி
மன்னவனை மலையில் காணவோ ?

அந்திப் பொழுதும் மெல்லக் கவியுது
சந்திரோ தயம்சாயந்திர சாத்திரம் கூறுது
சுந்தரி உன்னிடம் காதிலேதோ சொல்லுது
மந்திரமோ மாலையின் காதல் வேதமோ ?

----முறையே வஞ்சித்துறை , வஞ்சிவிருத்தம் , கலிவிருத்தம்

எழுதியவர் : யாப்பெழில்தோட்டக்காரன் க (5-Dec-21, 10:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே