உலக மண் தின வாழ்த்துக்கள்

நாம் வாழ இடம் கொடுப்பது மண்ணே
நாம் வாழ நீர் கொடுப்பது மண்ணே
நாம் வாழ உணவு கொடுப்பது மண்ணே
நாம் கோடியில் பணம் பண்ண வழி வகுப்பது மண்ணே
நாம் வீசும் குப்பைகளை சுமப்பது மண்ணே
நம்முடைய அனைத்து கழிவுகளையும் உரமாக்குவது மண்ணே
மண்ணால் மனிதனுக்கு மதிப்பதிகம் இந்த உலகில்
மண்ணால் வாழ்ந்தவனும் உண்டு மண்ணால் வீழ்ந்தவனும் உண்டு இந்த உலகில்
அனைத்து உயிர்களின் இறுதியில் உறங்கும் இடமும் மண்ணே
மண்ணை நம்பி அனைத்து உயிர்களின் வாழ்க்கையும் உள்ளது
மண்ணை காப்போம் மன நிம்மதியோடு வாழ்வோம்
அனைவருக்கும் எனது உலக மண் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : முத்துக்குமரன் P (5-Dec-21, 10:48 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 33

மேலே