உறக்கம் கலைக்கும் கனவுகள்
முன்னோரு காலத்திலே - முதலென
ஈன்றப் பெருந்தகை உடைவாளால் மடிந்திட
தன்னோடு படைகொண்டு - பகைவரை
வீழ்த்திட வீரனாய் வேடம் பூண்டானவன்
கண்ணியம் அறியாமல் - கணைத்துணை
யென்றெண்ணி களத்தினில் சினத்துடன் திறம்பட
வெண்சங்கு முழங்கிடினும் - அவன்மனம்
வெந்துத் தணியாத மிடறும் கொடுங்கனலாக
பகைவர் வாள்வீச்சில் - அவன்படை
குறும்படை குறைபட போரிட தடைபட
திறம்பட அவனோடு - தீயாய்ச்
சுடர்விட ஒளியென மிளிர்ந்திட ஓர்மகள்
உதித்திட்டாள்! என்றும் - உலராக்
கனியென உகந்தற் சுவையென களமதில்
நெடும்படைக் கொன்றொழிக்க - எழுந்திட்ட
படைகொண்ட கோமகன் வீட்டுக் குடியல்ல
பெருந்திரள் போர்ப்படையை - அவளது
விடைக்கொண்ட வாளால் தடையின்றி வீழ்த்திட
இதைக்கண்ட அவனாலே - அவளது
இடைக்கண்டு எஞ்சிய இளமைப் பார்வையால்
வலைவீச மனம்பேச - திண்ணிய
போர்க்குணம் பூங்குழலாலே பூவையவளை பொதிந்துகொண்ட
கோமகன் நானே - கொய்தற்கரிய
குழலினி அவளாமே!, என்றதோற் கனவென
மொழிந்திடக் காரணம் - தீண்டிட
விடியலில் விளங்கிடவே வியத்தகு கனவிற்
கொடியவை நிலமதில் உண்டோ...!