நன்மையடைவாயே

புலர்ந்திடும் காலை பொன்னொளி சிந்திப்
புன்னகை செய்திடும் நேரம்
மலர்ந்திடும் சோலை மலர்களில் தேனை
வண்டுகள் மொய்த்தலின் ஈரம்
சலசல ஓடை சலிப்புக ளின்றிச்
சங்கதி சொல்வது கீதம்
நலம்பெற வுன்னை நவிலுமி யற்கை
நன்மைய டைந்திடு வாயே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Dec-21, 2:29 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 56

மேலே