அவள் ஒரு.....
💜🌸💜🌸💜🌸💜🌸💜🌸💜
*கவிதை*
படைப்பு: *கவிதை ரசிகன்*
💜🌸💜🌸💜🌸💜🌸💜🌸💜
பெண்ணே!
🌙நிலா முகம்
🌷மலர் முகமெல்லாம்
உன் முகம் கண்டால்
வாடிடுமே..!
⛈️கார்மேகக் கூந்தல்
🐍கருநாகக் கூந்தல் எல்லாம்
உன் கூந்தல் கண்டால்
கேவலப்பட்டு
உதிர்ந்திடுமே!
பொன்னுடல்
பூவுடல்🌹 எல்லாம்
உன்னுடல் கண்டால்
ஆச்சரியத்தில்
உறைந்திடுமே......
🔱வேல்விழி
🐟மீன் விழி எல்லாம்
உன் விழி கண்டால்
பொறாமையில் சிவந்திடுமே....!
💃அன்ன நடை அழகு நடை எல்லாம்
உன்னை நடை கண்டால்
அதிர்ச்சியில் நின்றிடுமே...!
👄கோவை உதடு
கனி உதடெல்லாம்
உன் உதடு கண்டால் வார்த்தையின்றி துடித்திடுமே.....
🍎 ஆப்பிள் கன்னம்
🥭 மாங்கனி கன்னமெல்லாம்
உன் கன்னம் கண்டால்
கண்ணீரில்😭 நனைந்திடுமே......!
🦜கிளி அழகு
🦚 மயில் அழகு எல்லாம்
உன்னழகு கண்டால்
வெட்கத்தில்
தலை குனிந்திடுமே...!
💋தேன்மொழியும்
செம்மொழியும்
உன் மொழி கேட்டால்
திகைப்பில் வாயடைத்துப் போயிடுமே....!!!
💃அகிலத்தில் இல்லை
உன்னை போல் ஒரு பிறவி
நீயோ இவ்வுலகத்திற்கு
அதிசய பிறவி.....!
*கவிதை ரசிகன்*
💜🌸💜🌸💜🌸💜🌸💜🌸💜