பெண்மையின் திருக்கோலம்

பெண்மையின் திருக்கோலம்
 
விடியல் வருமுன் கடிகாரம் ஓடும்முன்
விழித்திருந்து வாசலை மென்மையாக்கி
கண்ணில் காணும் கலையின் சித்திரம்,
கண்மணியே! வளைக்கரமே!கோலமிடும்!
 
தினதோரம் வாசலில் பூத்திடும் திருக்கோலம்
தித்திக்கும் தேனமுழ்த்தாய் கண்ணைக் கவரும்
கற்பனை ஓவிய திறன் இலக்கிய   கலையவும்
கவிபாடும் கவிஞனின் பெண்மையின்   காவியாகலை
 
வண்ணக் கோலங்கள் களைக்கட்டும்
வானகமெங்கும் பூத்திடும் திருக்கோலம்
கார்முகிலும்  கதிரவனும் சந்திரனும்
பவனிவரக்  கலைமகளே கோலமிடு!
 
இல்லறம் பொங்கப் புதுமையைக் காண
பண்டிகையின் பொன்யொளி  கோலமிது
இல்லறம் பொங்கப் புதுமை கோலமிது!
இனிய விருந்துக்கு அழைப்பின் கோலமிது
 
ஒயிலது உழைத்தவனின் இன்பம் காணக் கோலமிது!
உன்னதமான விடியலைக்கண்டுமகிழத் திருக்கோலமிது!
மார்கழி தை சித்திரை மாதம் இனிய கோலமிது!
தமிழனின் சொல்லின்பம் கொண்டாடக் கோலமிது!
 
ஒழிவிலாது உழைத்தவனின் இன்பம் காணக் கோலமிது!
உன்னதமான விடியலைக்கண்டு  மகிழத்  திருக்கோலமிது!
இறைவனே காணத் திருமகளே மன நிறையக் கோலமிடு
இல்லதின் இன்பம்க்கொள்ள திருமகளைக் கோலமிடு!
 
கம்பி கோலம்,பூக்கோலம், வரைவு கோலம்,
வண்ணக்கோலம்,தெய்வீக கோலம்,
விழாக்கோலம் கலைக்கோலம்
மலர்கோலம் தேர்கோலம் காவிய கோலம்,
பெண்ணின் அழகு வலைகரம் கோலமிது
 
திராவிட மகளின் கலையின் சரத்திர கோலமிது!
பரம்பரையாய் வழிவந்த திருமகளின் கோலமிது!
கலைச்செல்வியின் மொழியினால் மலர்ந்த கோலமிது!
தமிழ்கலையின் காவியத்தின் கவர்ந்த கோலமிது!
 
மின்னல் போன்று வண்ணங்களின் கோலங்கள்!
வளைக்கரங்கள் வரைந்த வியப்பான பொன் சித்திரங்கள்!
தெருக்களெல்லாம் அச்சிட்டு பெண்கள் புலரும் கலையிது !
காலத்தின் புதையலாய் திகழ்ந்துவரும் திருக்கோலங்கள்!

தமிழ் மகளே! தரணியின் பொன்மகளே!
கவியும் நீயே!கலையும் நீயே! உலகிற்க்கு
பொருள் தந்த பொக்கிஷமே! நீயில்லாமல்
அசைவுமில்லையே தமிழ் மகளே நீ வாழ்க!

எழுதியவர் : இராகு.அரங்க.இரவிசந்திரன் (19-Dec-21, 6:53 am)
பார்வை : 204

மேலே