காதல் என்பது எது

அவனும் நானும் சேர்ந்தே இருந்தோம்
அதுவே காதல் என்று நினைத்தேன்
அவனே உலகம் என்றும் இருந்தேன்னான்
அவன் இன்று என்னைவிட்டு விட்டு
என்னெதிரேயே வேறொருவளுடன் என்னெதிரேயே
உறவாடுகின்றான் தேனுண்ணும் வண்டு
மலர் மாறி உறவாடுவது போல்
இப்போது தெளிவானது எண்மூடமண்டைக்கு
காதல் வேறுகாமம் வேறென்பது
என்ன செய்வேன் 'கண்கெட்டபின்னே
சூரிய நமஸ்காரமா' என்பார்கள் அதுபோல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Dec-21, 10:16 am)
பார்வை : 148

மேலே