உன் மௌனப் பார்வைக்காக

மெல்ல விழி இமை கவித்து
மெல்லிய இதழில்
சற்று தெரிந்தும் தெரியாமலும்
முத்துப் புன்னகை தவழவிட்டு
நெஞ்சில் வசந்தத் தென்றலை
வீசச் செய்யும்
உன் மௌனப் பார்வைக்காக
ஒரு புத்தகம் எழுதலாம் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Dec-21, 7:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 208

மேலே