இரவு வானம்

உன் கூந்தல்
இரவு வானம்.
உன் இமை துடிப்பு
மின்னல்கள்.
உன் புன்னகைகள்
விண்மீன்கள்.
உன் நெற்றிப் பொட்டு
வெண்ணிலா.
இரவு தேவதையே!
காதல் மழை பொழிகிறாய்
முத்தத்தில் நனைகிறேன்.
காதல் என்னும் கேள்விக்கு
காதல் பதிலாகிறது.
காதல் என்னும் நோய்க்கு
காதல் மருந்தாகிறது.

எழுதியவர் : (20-Dec-21, 8:15 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 119

மேலே