ஊடல் மறையும் புணர்ச்சியில்
நேரிசை வெண்பா
நினமென் கொழுப்பும் அனலில் உருகி
கனமும் மறையுமாம் காணா -- மனமும்
மெழுகாய் அடமுருகி நிற்பள் புணரத்
தழுவ அடங்குவள் பார்
கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால்
மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம்
ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?.
குறள் 10/18