அணைக்க ஓடுது மனம்
நேரிசை வெண்பா
ஊடல் கொளநான் ஒதுங்க மனமோடி
பாட நெருங்கிற் றவரையும் -- பாடம்
புகட்ட நினைத்து ஒதுங்க மனமோ
அகலா வணைக்கோடும் பார்
அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது
அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல்
அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத்
தழுவினேன்.
குறள். 9/18