செங்கொட்டை நெய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தாதுவும்,பு ரூணமுமாந் தத்துரு,ப ரங்கிப்புண்
கோது புரியிருமைக் குட்டிணங்கன் - காதுங்
கரிமுகி யூரர் கரப்பான் நிமிர்போம்
எரிமுகிநெய் யாலென் றறி
- பதார்த்த குண சிந்தாமணி
இது தடிப்பு, பரங்கிப்புண், கருங்குட்டம், வெண்குட்டம், கருஞ்சொறி, கரப்பான், திமிர்வாதம் ஆகியவற்றை நீக்கும்