ஐங்கூட்டு நெய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அஞ்செண்னெய் யைக்காணில் ஆலித்த பின்னிசிவுந்
தஞ்சமென வாய்வுந் தணியுங்காண் - பஞ்சாய்ப்
பறக்குமே சந்நிசுரம் பாரிலையச் சேஷ்டை
யிறக்குமே நன்றா யியம்பு

- பதார்த்த குண சிந்தாமணி

ஆமணக்கு, எள், வேம்பு, புன்னை, புங்கு இவற்றின் நெய்களைக் கலந்து தைலமாக்கிப் பயன்படுத்தினால் பின்னிசிவு, வாதம், சன்னிபாத சுரம், கபதோஷம் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Dec-21, 7:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே