முதல்சீரில் சீரொழுங்கு - ஆசிரிய விருத்தம்

காய்ச்சீரில் ஆரம்பிக்கும் விருத்தங்களில்,
நான்கடிகளிலும் முதல்சீர் மட்டுமாவது சீரொழுங்கு வேண்டும்.
முகநூல் வலைத்தளத்தில், எழுத்து வலைத்தளத்தில் எழுதும் கவிஞர்கள், பாவலர்கள் பெரும்பாலோர் முதல்சீரில் சீரொழுங்கு பாராமல், பொருட்படுத்தாமல் மாங்காய்ச் சீர்களும், விளங்காய்ச் சீர்களும் மாறி மாறி வருமாறு கவலையின்றி, கவனமின்றி எழுதுகிறார்கள்.

ஒவ்வொரு சீரிலும் மூன்று அசைகளுக்கு மேல் வராது.

கீழேயுள்ள பாடலைக் கவனியுங்கள்:

நான்கடிகளிலும் கூவிளங்காய்ச் சீர்;

சிவகதி
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

நித்தியமாம் ஆனந்த உருவம் ஆகி,
..நிறைவுபடும் பொருளாகி, கறைப டாது
சத்தியமாய் அனைத்துயிர்க்கும் உள்ளீ(டு) ஆகி,
..சங்கற்ப விகற்பங்கட்(கு) அயல(து) ஆகி
வைத்தசிவ தத்துவத்தின் இயல்பு தன்னை
..வருகுருவின் அருளினினி(து) உணர்ந்து வாழும்
அத்தகையர் பிறப்புவாழி இடைநின்(று) ஏறி
..அழியாத சிவகதியில் அடைவர் அன்றே

- பிரமோத்தர காண்டம்

சிந்தியுங்கள்! கவனமாக எழுத வேண்டும். மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Dec-21, 3:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே