🌤️கண்ணைகட்டும் கதிரவனோ🌞அவன்

முழுவட்ட கதிர் முகமோ.....
அதில் முழுமதி அவள் நிறமோ....
மறைத்திடும் மேகங்கள் அவள் வெட்கமோ....
மஞ்சரி அவள் உடல் வண்ணமோ
வர்ணனைகளை மறைத்திடும் செவ்வானமோ......
விவாதத்தை அள்ளிக்கொடுக்கும் மழை மேகமோ
அதில் நனையும் முழுமேனியோ.......
இதனை வெறிகொண்டு பார்த்து
கண்ணைக்கட்டும் கதிரவனோ அவன்...........!!


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (26-Dec-21, 9:26 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 141

மேலே