கழறும் அவையஞ்சான் கல்வி இனிது - இனியவை நாற்பது 12

இன்னிசை வெண்பா

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது. 12

- இனியவை நாற்பது

பொருளுரை:

குழந்தைகள் பிறவிக் குறைபாடு, நோய்த்தொற்று போன்ற நோய்கள் இல்லாமல் வாழ்வது இனியது.

சொல்வதற்குரிய சபையறிந்து அதற்கேற்பச் சொல்கின்ற சபைக்கு அஞ்சாதவனுடைய கல்வி இனியது.

அறிவுக் குறைவில்லாத நற்குணம் உடையவரிடம் சேரும் செல்வம் நீங்காதிருப்பது இனியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Dec-21, 12:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 180

மேலே