இன்னும் ஒருவாட்டி
![](https://eluthu.com/images/loading.gif)
பாத்து பாத்து
எடுத்து வச்சும்
ஒத்தப்பொருள்
விட்டுப்போச்சே – நீ
படிச்சு படிச்சு
சொன்னபோதும்
பாதகத்தி நான்
மறந்துட்டேனே – நீ
அத்தனதடவ
கேட்டபோதும்
ஆசைப்பட்டு மறைச்சிட்டேனோ – ராசா
விட்ட பொருள எடுக்கவாது
இன்னும் ஒருவாட்டி வந்து
பாத்திட்டு போயிருய்யா...