திறந்த ஜன்னல் ஜாக்கெட்
நேரிசை வெண்பா
பெண்ணின்கா தைக்கடித்த பேடியென்ன ரேட்யென்றான்
பெண்சினத்தில் மண்டை பிளந்தாளாம் - பெண்ணின்
கொலைகுற் றமதென்று தூக்கிலிடச் சொன்னார்
விலைமாதா சொல்மின் னிவள்
ஆட்டின் கட்ஜாக்கெட்
ஆசிரியப்பா
பெண்ணும் தன்னை அழகென நினைக்காள்
கூந்தல் பின்னல் இல்லை சுங்கும்
இல்லை விரித்த கோலத் தில்காண்
முகவெட் டழகை ஆடியில் ரசிப்பளாம்
முதுகைப் பார்த்தறி யாதவள் மேலுடை
ஆட்டின் வெட்டு ஜாக்கெட் டில்காண்
தொங்கு சுங்கு ஆடிட முதிர்ந்தமுன்
னழகும் ஆடியாய் பளபளத் துமின்னும்
முதுகை பலர்பார்க் கொய்யா ரநடை நடக்க
நடந்தாள் நர்த்தகி நாயகி யாமிவள்
வேலையிலா மைனர் குஞ்சொன்
றவள்பின் சென்றுக் கேட்டதை கேளே
நேரிசை வெண்பா
பெண்ணின்கா தைக்கடித்த பேடியென்ன ரேட்யென்றான்
பெண்சினத்தில் மண்டை பிளந்தாளாம் - பெண்செய்
கொலையா மிதென்றவர் தூக்கிலிடச் சொன்னார்
விலைமாதா சொல்மின் னிவள்
........
…