தமிழ் மணல் இல்லை
ஏனுங்க வேண்டிய அளவுக்கு சம்பாதிச்சாச்சு. ஆண்டவன் அருளால்ல எனக்கு பெண்குழந்தை பொறந்திருக்குதுங்க. குழந்தைக்குத் தமிழ்ப் பேரு வேண்டாங்க. நம்ம தமிழர் வழக்கப்படி வேற மொழிப் பேரைப் பொண்ணுக்கு வைக்குறதான் நமக்கு கவுரவம், மதிப்பு. நீங்க செஞ்ச தொழில் சம்பந்தமான பேரா இருக்கணும். அதுதாங்க முக்கியம்.
@@@@@@
நீ சொல்லறது சரிதான் சரசு. நீ சொல்லறதுக்கு எதுக்காவது நான் மறுப்புச் சொல்லியிருக்கிறேனா? குழ்ந்தை பிறந்த (இ)ரண்டாவது நாளே நம்ம பக்கத்துத் தெரு இந்தி ஆசிரியர்கிட்டக் கேட்டேன். நாஞ் செஞ்ச மணல் கடத்தலுக்குப் பொருத்தமான பேராச் சொல்லிட்டாரு.
@@@@@@@@
சீக்கிரம் சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்சுக்க ஆசையா இருக்குதுங்க.
@@@@@@@
மணல்
@@@@@@
என்னங்க 'மணல்'லுங்களா?
@@|@@@@
ஆமாம் சரசு. தமிழ் 'மணல்' இல்லை.
@@@@@@@
அடடா. அருமையான பேருங்க. சனங்க கேட்ட எம் மகள் பேரு இந்தி மணல்னு சொன்னாப் போதுங்க. 'சுவீட்டு நேமு'ன்னு நம்ம சொந்த பந்தம் அக்கம் பக்கம் நண்பர்கள் எல்லாம் சொல்லுவாங்க.
@@@@@@
நம்ம நேரம் நல்ல நேரம் சரசு.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Manal = . Bird of Arabian, Indian origin. Feminine name. கடத்தல் செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றச் செயல்.