காபீ

கொடி, இங்கே வா?
@@@@@
என்னங்க பாட்டி என்னை "கொடி, கொடி"னு கூப்பிட்டு அசிங்கப் படுத்தறீங்க? எம் பேரு 'லதா'-தானே. அது எப்படி 'கொடி' ஆச்சு?
#######
'லதா'ங்கிற உம் பேருக்கு என்ன பொருள் (அர்த்தம்)னு தெரியுமா?
#####@@
அந்தப் பேரை வச்ச என்னோட அம்மா, அப்பாவுக்கே எம் பேருக்கு என்ன அர்த்தம் னு தெரியாதுங்க பாட்டி.
#@@#@@##
நான் தமிழாசிரியரா வேலை பார்த்தவடி. உன் அப்பாவுக்குத் 'திருமுருகன்'னு அழகான பேரை நானும் உன் தாத்தா முத்தரசனும் வச்சோம். அவனுக்கு தமிழ்ப் பேருள்ள பெண்ணாப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தோம். உன் அம்மா பேரு என்னனு சொல்லுடி கொடி. 'லதா'ங்கிற இந்திப் பேருக்கு 'கொடி'ன்னுதான்டி பொருள்.
@@@@@@@
என் அம்மா பேரு முத்தழகி. ஐயோ பாட்டி என் பேரு 'கொடி'யா? அடக் கடவுளே. என் தோழிகளுக்கு இந்தப் பேருக்கான அர்த்தம் தெரிஞ்சா என்னைக்"கொடி, கொடி"னு கூப்பிட்டு மானத்தை வாங்கிடுவாங்களே நான் என்ன செய்யறதுங்க பாட்டி?
@####
உன் தாய் மாமா தமிழ்மணி வழக்குரைஞர்தானே அவரைப் பாத்து உம் பேரை 'மலரழகி'னு மாத்திக்கடி 'கொடி' . சரி. நீ மாசமா இருக்கிற. உன் நாடியப் பிடிச்சுப் பாத்தேன். உனக்கு கண்டிப்பா ஆண் குழந்தைதான் பிறக்கும். அந்தக் குழந்தைதான் பிறக்கும். அந்தக் குழந்தைக்கு வைக்கிற பேரை நீயும் உன் கணவரும் முடிவு பண்ணீட்டாங்களா?
@@@@@@@
ஆமாம் பாட்டி. நீங்கள் சொல்லறது போல ஆண் குழந்தை பிறந்தா அந்தக் குழந்தைக்கு 'காபீ'-ங்கிற வெளிநாட்டுப் பேரை வைக்க முடிவு பண்ணீட்டாம். நீங்கள் என் பேருக்கான அர்த்தம் தெரிஞ்சதுனால எனக்கு ஆண் குழந்தை பிறந்தா நீங்கள் சொல்லற அழகான பேரை வைக்கலாம்னு நான் ஆசைப்படறேன். ஆனா என் கணவர் என் அப்பா, அம்மா மாதிரியே அணுவளவும் தமிழ்ப் பற்றும் இல்லாதவர். நான் என்ன சொன்னாலும் அவர் கேட்கமாட்டார்.
@@@||@|
'காபீ'யோ. காபீயாம் காப்பீயாம். என்ன 'கா...பீ' யோ? ச்சீ. என்ன பேரோ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kapi = Monkey or Sun. Indian origin. Masculine name.
இன்டியாசைல்ட்நேம்டாட்காம்.

எழுதியவர் : மலர் (6-Jan-22, 7:07 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 105

மேலே