நீ லேற் தான்டா

நீ லேற் தான்டா.

கடற்கரைக்கு
சென்றிருந்தேன்
காற்று வாங்க,
அங்கு பார்த்த
எவர் முகமும்,
என் மனதில்
பதியவில்லை.

ஆனால் !
அவள் முகம் மட்டும்,
என் மனதை விட்டு
விலக வில்லை.

அடுத்த முறை
சென்ற போதும்,
அங்கு அவள்
வந்திருந்தாள்.

அவளுடன் பேச!
என் மனம்
துணியவில்லை?
வீடு சென்ற பின்!
என் மனம் என்னை
எள்ளி நகைத்திட,
அடுத்த முறை பார்!
இப்ப நீ சும்மா இரு
என்றேன் அதனிடம்.

அடுத்தமுறை நான்
சென்றபோது,
அவள், அந்த அவள்!
அங்கிருந்தாள்,
ஆடவன் ஒருவனுடன்
அமர்ந்திருந்தாள்.

என் மனம்
என்னை மீண்டும்
எள்ளி நகைத்தது!
எல்லாத்திலும்

நீ லேற் தான்டா.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (7-Jan-22, 11:00 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 51

சிறந்த கவிதைகள்

மேலே