அர்ச்சனைப் பூக்கள்
தொடுத்த நல்ல பூக்களால் இறைவனுக்கு
மாலை சூடி கண்கொண்டு பார்த்து மகிழலாம்
உதிரிப் பூக்களால் 'அவன்' நாமம் சொல்லி
அர்ச்சித்து இறைவனோடு உறவு சேர்க்கலாம்
போவதும் இல்லாது போகிற மனத்தால்
'அவன்' நாமமே பூவாக்கி அர்ச்சிக்கலாம்
மனமிருந்தால் மார்க்கம் உண்டு அறி