ஐரா கைரா

யாரும்மா நீ? ஊருக்கு புதுசாத் தெரியுது.
@@@@@
ஆமாம் ஐயா. சென்னையிலிருந்து வர்றேன்.
@@@@@
யாரு வீட்டுக்கு விருந்தாளி நீ?
@@@@@
அவ்வை நகர் தலைவர் தங்கையா தாத்தாவோட பேத்தி நான்.
@@@@@
ஓ... தங்கையா பேத்தியா. அவன் என்னோட பெரியப்பா பையன் தான். சரி உம் பேரு என்ன?
#####@@
எம் பேரு 'கைரா' தாத்தா.
@@||@
என்ன கையிறு?
@@@@@
கயிறு இல்லங்க தாத்தா. கைரா. அதுக்கு அர்த்தம் எல்லாம் கேக்காதீங்க. நாங்க சோதிட நம்பிக்கை அதிகம் உள்ளவங்க. சோதிடர் சொன்னபடி எனக்கு பேரு வச்சாங்களாம் என் அம்மாவும் அப்பாவும்.
##@###
பின்னாடி வர்றது யாரு? உந் தங்கச்சியா?
@@@@@@
ஆமாந் தாத்தா. அவள் பேரு ஐரா.
@||@@@@@
என்னது 'ஐரா'வா? ஐரா எனக்கு அயிர மீனு குழம்பு ருசியைத்தான் ஞாபகப் படுத்துது.
பரவால்ல. பேரு எப்படி இருந்தா என்ன?-
(இ)ரண்டு பேரும் நல்லா (இ)லட்சணமா அழகா இருக்கிறீங்க. ஐரா - கைரா.

■■■◆◆◆◆◆◆■■■■■■■◆◆◆◆◆◆●●●
Kaira = White lotus. Indian origin. Unisex name.
Ira = Earth, Muse or watchful of a town. Unisex name. English, Hebrew, Indian origin

எழுதியவர் : மலர் (10-Jan-22, 7:31 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 76

மேலே