ஏன்டா தம்பி உனக்கு வெக்கமா இல்ல

ஏன்டா தம்பி, உனக்கு வெக்கமா இல்லை?
@@@@@@
அக்கா, எங்கிட்ட எந்தக் கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. நான் எதுக்கு வெட்கப்படணும்? நான் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கூட பார்க்காம ஒழுக்கமா இருக்கிறேன். என்னைப் போயி...
########
அதெல்லாம் சரிடா தம்பி. ஆனா இந்தக் காலத்தில மொகத்தில தாடி இல்லாத ஆண்கள் யாரும் இல்ல. மீசையும் ஒரு மாதிரியா வச்சுக்கிறாங்க. தலை முடியையும் கன்னா பின்னானு வெட்டிக்கிறாங்க. சில பசங்க கீழ் உதட்டுக்குக் கீழே ஈ ஒட்டினமாதிரி முடிய சொரண்டி விட்டுக்கிறாங்க. இதுல எதுவுமே செய்ய வழிச்செடுத்த மூஞ்சியை வச்சிருக்கிறயே உனக்கு வெக்கமா இல்ல.
காலத்துக்கு தகுந்த மாதிரி எல்லாம் நாகரிகமா இருக்கிறாங்க. நீ....
@|||||@@@@@@
அக்கா, ரவுடி பயல்களும் நீ சொல்லற நாகரிகத்தின்படிதான் தலை முடியை வெட்டிக்கிறாங்க. அவுங்க தலைமுடி புயல் காற்று அடித்து ஒரு பக்கமா சாஞ்சு கெடக்கிற மரம் போல கெடக்கது. இந்த அநாகரிகம் எனக்குப் பிடிக்காது.

எழுதியவர் : மலர் (9-Jan-22, 9:04 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 136

மேலே