நினைத்துப் பார்த்தேன் பெண்ணே
நினைத்துப் பார்த்தேன் பெண்ணே, உன்னை நினைத்துப் பார்த்தேன் பெண்ணே, உன் நினைவு என்னும் மழையில் நான் நினைந்த பொழுதும் பெண்ணே உன் உருவம் என்னும் தீபம் என்னுள் என்றும் அனையாதடி...
மறதி என்னும் நோயை என்னுள் உன்னை மறக்க சொன்ன போதும் அதுவும் மறுத்து பேசி, என்னை வெறுத்து போனதடி கண்ணே கண்ணே...
பல இரவு கடந்தேன் பெண்ணே என் இறைவி நீயும் இன்றி என்மேல் என்மேல் இரக்கம் கொள்வாயோ...
தினமும் உறைந்து போனேன் நீ இல்லா ஜனமும் கரைந்து போனேன் என் உணர்வில் கலந்த பெண்ணே நான் உறக்கம் கொள்ளும் முன்னே என் முன் என் முன் வருவாயோ...
என் காதல் பயணம் முடிந்தபின்பு பாதை மறந்தேன் பெண்ணே என் பாவை உன்னை தேடி எங்கே எங்கே சென்றாயோ...
வலிகள் என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் கண்டேன் பெண்ணே உன் விழிகள் என்னை காண அது மறுக்கும்போதுதானே கண்ணே என் கண்ணே...
கவிஞர்
முனைவர் ஏ. மணிகண்டன்,
சேலம்.122.