புண்ணிய பூமி
இறைவன் முதன் முதலில்
அடியெடுத்து வைத்து
கால் பதித்த இடம்போல
காசி என்ற நகர்
சந்நியாசிகளைப் போல
சந்துகளும் அதிகம் இங்கு ,
வீசும் காற்றும், ஓடும் கங்கையும்
வரவேற்கும் எப்போதும் மக்களை
இறைவன் விசுவநாதரின்
ஆலயமும் , அல்லாவின் மசூதியும்
அருகருகில் இருந்தாலும்
அவரவர் திசை நோக்கி
அவரவர் பயணம்,
புனிதம் விசலமானது
புண்ணியம் எல்லோருக்கும் உண்டு
ஆதி விதை எனும் அடையாளம்
இங்கு வாழும் மக்கள் தான்
வசதிகள் இல்லாத போதும்
வெளி நாட்டவரும் எதையோ
எதிர்பார்த்து இங்கு வருகிறார்கள்
காசிக்கு வந்து ஆசி பெற்றால்
கருமங்கள் தொலையும் என்பது
அவர்களின் நம்பிக்கை,
இறைவனுக்கு முக்தி தந்து
சிறப்புற்ற புண்ணிய பூமி