காதல் பரிசு
வில்வித்தை போட்டியில்
நான் வெச்சக்குறி
எப்போதும்
தப்பியதில்லை
வெற்றிக்கனியை
பறித்து விடுவேன்...!!
வில் போன்ற
புருவம் கொண்ட
ஒரு பருவபெண்ணின்
விழி அசைவில்
நான் சிக்குண்டேன்...!!
அவள் என்னை வீழ்த்தி
வெற்றி கொண்டாள்
தோல்வி என்னை
முதல் முறையாக
தழுவி கொண்டது...!!
அவளது வெற்றிக்கு பரிசாக
என்னையே கொடுத்து
அவளை தழுவிக்கொண்டேன்....!!
--கோவை சுபா