சமத்துவ விடியல்

விடியல்! விடியல்! விடியல்!
வானில் வீரத்திலம் இடும் விடியல்;
விண்ணில் பூத்து,
மண்ணில் வாழும் உயிரினங்களுக்கு
கிடைத்த விடியல்;
விழுந்து எழுந்த பருதியின் எழுச்சியே விடியல்.

விடியல் ஒரு புதையல்;
விடை தெரியாத கேள்விக்கெல்லாம்;
விடை தேடும் விடியல்;
விடை கிடைக்கவில்லை என்றால்
வாழ்வில் அடிக்கும் புயல்.

வயிற்றுப் பிழைப்புக்கு உழைப்பாளிக்காக வந்த விடியல்;
வயக்காட்டு உழவனுக்கு வழக்கமாக வரும் விடியல்;
வறுமைப் போராட்டத்தை தீர்க்க வந்த விடியல்;
வளமான வாழ்வாதாரத்தை சீர்படுத்த வந்த விடியல்;
வாழ்வியலின் துவக்கமே விடியல்;
இளைஞனின் வாழ்வை மலர வைக்க வந்த விடியல்.
விண்வெளி வெய்யோன் விண்ணொளி பூசும் விடியல்;
உயிர் ஜீவன்களின் சப்த நாடியே விடியல்;
தரணி போற்றும் விடியல்;
தன்னலம் அற்ற விடியல்;
வலம் வரும் விடியல்;
வாழ்வின் ஆதாரமே விடியல்;
எனக்கு உனக்கு என்று இல்லாது,
சாதி, மத, பால், இன வேறுபாடு இன்றி
எல்லோருக்கும் கிடைக்கும்
இந்த சமத்துவ விடியல்;
அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (18-Jan-22, 8:29 am)
Tanglish : samathuva vidiyal
பார்வை : 223

மேலே