பசியால் எரியும் வயிறு

கல்லுக்குள் உறையும் தேரைக்கும்
கருத்துடன் வைத்தான் உணவு

காட்டினான் இல்லை ஏழைக்கு
கருணை என்னும் இறைத்தன்மை

நின்றாடும் இறைவன் மறந்ததனால்
அன்றாடம் அரைவயிறு உணவையும்

மன்றாடி பாமரனும் தேடுகிறான்
தன் வசம் இல்லாத சாகசத்தால்!

வறியவன் வயிற்றில் வளரும் தீ
நெறியுடன் ஆற்றுவார் இல்

கணத்தில் புனலால் அடங்கா
தணலாகி ஜெகத்தினை அழித்திடுமே!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (18-Jan-22, 8:47 am)
பார்வை : 32

மேலே